வசமானது கணிதம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, ஹமீதியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1986ல், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த இனிய சம்பவம் இது...
அனைத்துப் பாடங்களிலும், நன்றாக படிக்கும் நான், கணக்கில் மட்டும் பலவீனமாக இருந்தேன்.


இதை கவனித்த கணித ஆசிரியை ஜூனத்பேகம், 'மனதில், 'கணக்கு வராது' என்றே முடிவு செய்திருக்கிறாய். முதலில் அந்த எண்ணத்தை உடைத்து, வெளியே வா... முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்...' என்று, அறிவுரை வழங்கினார்.



அவரது பேச்சு நம்பிக்கையை ஏற்படுத்தியது. கணிதத்தில், நெளிவு சுழிவுகளை முறையாக கற்றுக் கொண்டேன்.


சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஊக்குவித்தார். அதிலிருந்து, கணிதமும் என் வசமானது. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.


இப்போது என் வயது, 47; என் மனத்தடையை நீக்கி, முன்னேற்றத்தை துாண்டிய அந்த ஆசிரியையை, மனதில் கொண்டுள்ளேன்.