திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சத்திரம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 2012ல், 7ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில ஆசிரியை லட்சுமி, புதிதாக வந்தார்.
மிகவும் கண்டிப்பாக, இலக்கண பாடம் நடத்துவார். தினமும், சில சொற்களையாவது எழுத, பேச பயிற்சி அளிப்பார்.
பொழியும் மழை பற்றியும், மகிழ்விக்கும் விடுமுறை பற்றியும் ஆங்கில மொழியில் கவிதை எழுதச் சொல்வார். தவறுகளை மிகவும் பொறுமையாக திருத்துவார்.
அவரிடம் கற்ற மொழி, கல்லுாரி வளாகத்தில் பயத்தை போக்கியது. சுற்றுலாவின் போது ஆங்கிலேயர்களுடன், இலக்கணப் பிழை இன்றி சரளமாக பேச வாய்த்தது; தன்னம்பிக்கையை தந்தது.
தற்போது என் வயது, 19. மொழியை எளிமையாக கற்பித்து, உயர செய்த, அந்த ஆசிரியையை போற்றி வாழ்கிறேன்.
அசத்தும் ஆங்கிலம்
• C. THIRUGNANA SAMBANTHAN